கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி தொடரில் இடம்பெற்ற அதிக எடை கொண்ட வீரர் + "||" + In the India-WestIndies Test Series Featuring Overweight player

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி தொடரில் இடம்பெற்ற அதிக எடை கொண்ட வீரர்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி தொடரில் இடம்பெற்ற அதிக எடை கொண்ட வீரர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக எடை கொண்ட ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இதனைதொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான  டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிதாக ஒரு வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் பெயர் ரஹீம் கார்ன்வால், மேலும் இவரது உயரம் 6.6 அடி மற்றும் இவரது எடை 140 கிலோ ஆகும். கார்ன்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற வினேதமான சாதனையை  படைப்பார். 

கார்ன்வால் 55 முதல் தர போட்டிகளில் விளையாடி 2,224 ரன்களும்,  260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள இந்திய அணிக்கு எதிராக இம்முறை விளையாடுவது சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 117 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 117 ரன்களில் சுருண்டது.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்த்துள்ளது.
3. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி தன்னுடைய அணியினருடன் ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் பொழுதை கழித்தார்.
4. வெஸ்ட் இண்டீசில் சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் மேலாளர்
வெஸ்ட் இண்டீசில் சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் மேலாளர், மன்னிப்பு கேட்டதால் திரும்ப அழைக்கும் முடிவை கிரிக்கெட் வாரியம் கைவிட்டது.
5. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.