கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் ‘பிளே-ஆப்’ சுற்று: திண்டுக்கல் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் + "||" + Chepauk Super Gillies set target of 170 for Dindigul Dragons to win

டி.என்.பி.எல். கிரிக்கெட் ‘பிளே-ஆப்’ சுற்று: திண்டுக்கல் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டி.என்.பி.எல். கிரிக்கெட் ‘பிளே-ஆப்’ சுற்று: திண்டுக்கல் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயம் செய்துள்ளது.
4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின. இந்த நிலையில் ‘பிளே-ஆப்’ சுற்று நெல்லையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் மல்லுகட்டுகின்றன. 

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்றே ஆட்டம் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ அதிரடியை காட்டினார். 16.4 வது ஓவர் வரையில் நின்று விளையாடிய கங்கா ஸ்ரீதர் ராஜூ 81 ரன்களை குவித்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 169 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் அணிக்கு 170 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.