டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் 151 ரன்கள் சேர்ப்பு


டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் 151 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 3:40 PM GMT (Updated: 11 Aug 2019 3:40 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ்  அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் சுற்று  (எலிமினேட்டர்) போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் களமிறங்கினர். இதில் விஷால் வைத்யா 4 ரன்னிலும், லோகேஷ்வர் ரன் எதுவும் எடுக்காமலும் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய பாபா அபராஜித் 13 ரன்னிலும், பிரான்சிஸ் ரோக்கின்ஸ் 4 ரன்னிலும், ஆர்.சதீஷ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த மொகித் ஹரிஹரன், சஞ்சய் யாதவ் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இதில் மொகித் ஹரிஹரன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில், பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த சஞ்சய் யாதவ் 77 ரன்களுடனும், ஹரிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

மதுரை பாந்தர்ஸ் அணியில் அபிஷேக் தன்வார் மற்றும் ரஹில் ஷா ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளும், கிரண் ஆகாஷ் மற்றும் செல்வகுமரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Next Story