கிரிக்கெட்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 279 ரன்கள் குவிப்பு + "||" + 2nd ODI Cricket: Against the West Indies team, The Indian team amassed 279 runs

2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 279 ரன்கள் குவிப்பு

2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 279  ரன்கள் குவிப்பு
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் 280 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.


அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 2(3) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 18(34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 20(35) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் விராட் கோலி அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

பின்னர் இந்த ஜோடியில் விராட் கோலி 120(125) ரன்களில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யருடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேதர் ஜாதவ் 16(14) ரன்களும், அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 1(2) ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களும், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணி களமிறங்க உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.