கிரிக்கெட்

கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இறுதி பட்டியலில் 6 பேர்! + "||" + BCCI shortlists six candidates for position of Indian cricket team head coach

கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இறுதி பட்டியலில் 6 பேர்!

கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இறுதி பட்டியலில் 6 பேர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இறுதி பட்டியலில் 6 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பதவிக்காக வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியுசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மேற்கிந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6 பேரை தேர்வு செய்துள்ளது. இவர்களில் ஒருவரை கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்த பின் நியமிக்கும்.