நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்


நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:34 PM GMT (Updated: 13 Aug 2019 11:34 PM GMT)

நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.

காலே,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த மைதானத்தில் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி பெரும்பாலும் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும். இந்த போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நியூசிலாந்து அணி வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்க முயற்சிக்கும். இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story