கிரிக்கெட்

இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல் + "||" + Dale Steyn ‘apologises’ to Virat Kohli, takes a dig at SA selectors after T20I snub

இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்

இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்
இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டெயின்  அவற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், குறுகிய ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. அதில் டேல் ஸ்டெயினின் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் டேல் ஸ்டெயினிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, அணியின் பயிற்சியாளர்கள் தன் பெயரை தொலைத்துவிட்டதாக டேல் ஸ்டெயின் பதில் அளித்தார். பின்னர் பெரிய போட்டிகளுக்காக பயிற்சியாளர்கள் உங்களை பாதுகாத்து வைத்துள்ளதாக அந்த ரசிகர் கூறினார்.

அதற்கு பதில் அளித்த டேல் ஸ்டெயின், இந்திய அணியை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாததற்கு தான் கோலியிடமும், கோடிக்காணக்கான மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.