கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் + "||" + TNPL Cricket finalist Chepauk Super Gillies Batting first

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சென்னை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கில்லீஸ் அணி 3 முறையும், திண்டுக்கல் அணி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.