கிரிக்கெட்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி + "||" + Former cricketer VP Chandrasekhar body Rahul Dravid Tributes

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைந்த வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவன பின்னணியோ பெரிய ஸ்பான்சர்களோ இல்லாமல் காஞ்சி வீரன்ஸ் என்ற டி.என்.பி.எல். அணியை தனியொரு ஆளாக நடத்தி, கடன் பிரச்சினையில் சிக்கியதே அவரது தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனை முடிந்து மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், விவிஎஸ் லட்சுமணன், அனில் கும்ப்ளே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் தொடக்க வீரர் வி.பி.சந்திரசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் என பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், மறைந்த வி.பி. சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடக்க காலத்தில் சென்னை குருநானக் கல்லூரியில் பயிற்சி மேற்கொண்ட போது சந்திரசேகருக்கும், டிராவிட்டுக்கும் இடையே இணக்கமான நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து, மறைந்த வி.பி. சந்திரசேகர் உடலுக்கு தமிழகத்தை சேர்ந்த  கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.