கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’ + "||" + Test against New Zealand: Sri Lanka all out for 267

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 267 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இதைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து இருந்தது.


3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சுரங்கா லக்மல் 40 ரன்களும், டிக்வெல்லா 61 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டும், வில்லியம் சோமெர்வில்லி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 76 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்துள்ளது. வாட்லிங் 63 ரன்னுடனும், சோமெர்வில்லி 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக கேப்டன் வில்லியம்சன் (4 ரன்), ராஸ் டெய்லர் (3 ரன்) ஏமாற்றம் அளித்தனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள், எம்புல்டெனியா 4 விக்கெட்டும், தனஞ்ஜெயா டி சில்வா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.