கிரிக்கெட்

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல் + "||" + Ashes 2nd Test: Australia stutter

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
லண்டன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்னில் ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். பான்கிராப்ட் 13 ரன்னிலும், கவாஜா 36 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 7 ரன்னிலும் வெளியேறினர். அந்த அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. தொடர்ந்து மழை கொட்டியதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் சுமித் (13 ரன்), மேத்யூ வேட் (0) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.