கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம் + "||" + The Indian team's warm-up game against the West Indies Cricket Board will begin today

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.
ஆன்டிகுவா,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஆடுகிறது.


இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைந்துள்ள புஜாரா, ரஹானே, ஜஸ்பிரித் பும்ரா, ஆர்.அஸ்வின், விருத்திமான் சஹா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் இந்த பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள். கடைசி ஒருநாள் போட்டியில் கைவிரலில் காயம் அடைந்த கேப்டன் விராட்கோலிக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.