கிரிக்கெட்

ராணுவ பயிற்சியை முடித்து டெல்லி திரும்பினார் - கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி + "||" + After completing military training, returned to Delhi MS Dhoni

ராணுவ பயிற்சியை முடித்து டெல்லி திரும்பினார் - கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி

ராணுவ பயிற்சியை முடித்து டெல்லி திரும்பினார் - கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி ராணுவ பயிற்சியை நிறைவு செய்து டெல்லி திரும்பினார்.
புது டெல்லி, 

உலகக் கோப்பை (2019) தொடரில், இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பினை நழுவவிட்டது. இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனியின் எதிர்காலம் தொடர்ப்பாக பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழுந்தன. 

மேலும், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய தாமதித்த போது டோனியின் ஓய்வு குறித்தும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனவும் பல செய்திகள் வெளியாகின. 

இதனிடையே  எம்.எஸ். டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் டோனி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. பின்னர் பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் எம்.எஸ்.டோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற எம்.எஸ்.டோனி தனது ராணுவ பயிற்சியை முடித்தார். காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்று நாட்டுக்காக ராணுவ பணிகளை ஆற்றினார். இதனையடுத்து எம்.எஸ்.டோனி இன்று தலைநகர் டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.