வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு


வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:14 PM GMT (Updated: 17 Aug 2019 11:14 PM GMT)

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாக்கா,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்சின் (இங்கிலாந்து) பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. பயிற்சியாளர் பதவிக்கு ரஸ்செல் டொமிங்கோ (தென்ஆப்பிரிக்கா), மைக் ஹெசன் (நியூசிலாந்து), மிக்கி ஆர்தர் (தென்ஆப்பிரிக்கா) உள்ளிட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ரஸ்செல் டொமிங்கோ வங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ‘ரஸ்செல் டொமிங்கோவின் ஆர்வம் மற்றும் பயிற்சி தத்துவம் எங்களை கவரும் வகையில் இருந்ததால் அவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் அவர் அணியை முன்னெடுத்து செல்ல என்ன தேவை என்பதில் தெளிவான திட்டத்துடன் உள்ளார்’ என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 வயதான ரஸ்செல் டொமிங்கோ முதல்தர போட்டியில் விளையாடிய அனுபவம் கிடையாது. அவர் தென்ஆப்பிரிக்காவின் 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் சீனியர் அணியின் பயிற்சியாளராக இருந்து இருக்கிறார். டொமிங்கோ வருகிற 21-ந் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார். அவரது ஒப்பந்த காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

Next Story