கிரிக்கெட்

பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அரைசதம் + "||" + In coaching cricket Rohit Sharma is half a century

பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அரைசதம்

பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அரைசதம்
பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
ஆன்டிகுவா,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.


இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. மயங்க் அகர்வால் 12 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 36 ரன்களிலும் (46 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ரஹானே ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவும், புஜாராவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 47 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 47 ரன்களுடனும், ரோகித் சர்மா 54 ரன்களுடனும் (93 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆடிக்கொண்டிருந்தனர்.