பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் கோலியின் பெயரை வைக்க முடிவு


பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் கோலியின் பெயரை வைக்க முடிவு
x
தினத்தந்தி 18 Aug 2019 11:12 PM GMT (Updated: 18 Aug 2019 11:12 PM GMT)

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் சூட்டப்பட உள்ளது.


* டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரை சூட்டுவது என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. ‘உலக கிரிக்கெட் அரங்கில் விராட் கோலியின் வியப்புக்குரிய பங்களிப்பு எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அவரது சாதனைகளுக்காக அவரை கவுரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் ஷர்மா குறிப்பிட்டார்.

* பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பவுன்சர் பந்து வீசுவது கிரிக்கெட்டில் ஒரு அங்கம். ஆனால் பந்து தாக்கி பேட்ஸ்மேன் எப்போது தடுமாறி கீழே விழுந்தாலும் பவுலர் உடனடியாக ஓடிச்சென்று உதவ வேண்டும். ஆனால் ஆஷஸ் டெஸ்டில் ஸ்டீவன் சுமித் பவுன்சர் பந்து தாக்கி வலியால் துடித்த போது, அவரை அருகில் சென்று பார்க்காமல் பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் ஒதுங்கி போனது நல்ல அறிகுறி அல்ல’ என்று குறிப்பிட்டார்.

* சமூக வலைதளங்களில் அதிகமானோர் பின்தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை தலா 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.


Next Story