ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷஜாத்துக்கு 1 ஆண்டு தடை


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷஜாத்துக்கு 1 ஆண்டு தடை
x
தினத்தந்தி 19 Aug 2019 2:01 PM GMT (Updated: 19 Aug 2019 2:01 PM GMT)

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஷஜாத் பலமுறை நடத்தை விதிகளை மீறியுள்ளார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ஷஜாத்  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு விதிகளை தொடர்ந்து  மீறியதற்காக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 12 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

"கிரிக்கெட்  வீரர்களுக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிமுறைகளை ஷஜாத் கடைப்பிடிக்கவில்லை. அனுமதி பெறமால் பல முறை நாட்டை விட்டு வெளியே சென்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கொள்கையை மீறியுள்ளார். நாட்டிற்குள் மேம்படுத்தப்பட்ட பயிற்சி வசதிகள் இருக்கும்போது, ஆப்கானிஸ்தான் வீரர்கள் இதுபோன்ற நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை" என்று அந்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  தெரிவித்துள்ளது.

31 வயதான முகமது ஷஜாத்  உலகக் கோப்பையின் போது சர்ச்சையில்  சிக்கினார். மேலும், முழங்கால் காயம் காரணமாக அவர் போட்டியின் நடுவில் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story