இந்திய கேப்டன் விராட் கோலியின் 11 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்


இந்திய கேப்டன் விராட் கோலியின் 11 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்
x
தினத்தந்தி 19 Aug 2019 3:33 PM GMT (Updated: 19 Aug 2019 3:33 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 11 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை பூர்த்தி செய்துள்ளார்.

இந்திய  கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான சர்வதேசப் போட்டியில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கிரிக்கெட் உலகில் அறிமுகம் ஆனார். இதையடுத்து கிரிக்கெட் உலகில் 2019 ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் விராட் கோலி 11 வருடங்களை கடந்துள்ளார். இதை நினைவு கூறும் விதமாக விராட் கோலி தனது டுவிட்டரில் உணர்ச்சிபூரமான பதிவினை பதிவிட்டுள்ளார். 

அதில், இதே நாளில் 2008-ஆம் ஆண்டு இளம் வயதில் (டீன் ஏஜ்) 11 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.  கடவுளிடம் இருந்து இத்தனை பெரிய ஆசிர்வாதம் கிடைக்கும் என கனவு கூட கண்டதில்லை. நீங்கள் அனைவரும் சரியான பாதையில் சென்று பெரும் வெற்றி பெற அனைத்து சக்திகளும் கிடைக்கட்டும் என்று விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விராட் கோலி, பல எண்ணற்ற சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். தற்போது அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் தொடரை கைப்பற்றி உள்ளது.

Next Story