கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப்பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம் + "||" + IPL: Sunrisers Hyderabad rope in Brad Haddin as the new assistant coach

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப்பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப்பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப்பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்,

2020ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும் இவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் பேலிசுடன் இணைந்து செயல்படுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 41வயதான ஹாடின் சர்வதேச அளவில் 66 டெஸ்டில் பங்கேற்று 3,266 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 126 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ள ஹாடின், 3,122 ரன்கள் அடித்துள்ளார்.

பிராட் ஹாடின் 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும் 2015ம் ஆண்டு உலககோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.