கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ' டிரா’ + "||" + West Indies A vs India, 3-day Practice Match drawn

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ' டிரா’

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ' டிரா’
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவானது.
ஆன்டிகுவா,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 56.1 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கவெம் ஹோட்ஜ் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

116 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 35 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரஹானே 20 ரன்னுடனும், ஹனுமா விஹாரி 48 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 78 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹனுமா விஹாரி 64 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 19 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்னிலும், ரஹானே 54 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆட தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவுற்றதால் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் விழ்த்தினர்.

பயிற்சி ஆட்டம் முடிவுற்ற நிலையில், ஆண்டிகுவாவில் வருகின்ற வியாழன் அன்று இந்தியா மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...