இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன்களாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே நியமனம்


இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன்களாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே நியமனம்
x
தினத்தந்தி 20 Aug 2019 2:45 PM GMT (Updated: 20 Aug 2019 2:45 PM GMT)

தென்ஆப்பிரிக ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன்களாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ‘ஏ’ மற்றும் தென்ஆப்பிரிகா ‘ஏ’ அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டி தொடர் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளுக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் 3 போட்டிக்கு ஒரு அணியும், கடைசி 2 போட்டிக்கு மற்றொரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல் 3 போட்டிகளுக்கு  மணீஷ் பாண்டேவும், கடைசி 2  போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் அய்யரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த இரு அணியிலும் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளார். இந்திய ‘ஏ’ அணியின் கேப்டானாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக உள்ளார். தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இரண்டு அரைசதமடித்து அசத்தினார்.

முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:

மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெக்வாட், சுப்மன் கில், அன்மோல்ப்ரீத் சிங், நிதீஷ் ராணா, ரிக்கி புய், இஷன் கிஷான்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் தூபே, க்ருணால் பாண்ட்யா, அக்ஸர் பட்டேல், யுவேந்திர சஹால், ஷ்ரதுல் தாகூர், தீபக் சஹார், கலீல் அகமது.

கடைசி இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மன் கில், பிரசாந்த் சோப்ரா, அன்மோல்ப்ரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, விஜய் சங்கர், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், ராகுல் சஹார், ஷ்ரதுல் தாகூர், துஷர் தேஷ்பண்டே, இஷான் போரெல்.

Next Story