கனே வில்லியம்சன், அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் ஐ.சி.சி.யிடம் நடுவர்கள் புகார்


கனே வில்லியம்சன், அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் ஐ.சி.சி.யிடம் நடுவர்கள் புகார்
x
தினத்தந்தி 20 Aug 2019 9:45 PM GMT (Updated: 20 Aug 2019 9:39 PM GMT)

காலேவில் கடந்த வாரம் நடந்த இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாய், 

காலேவில் கடந்த வாரம் நடந்த இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ஓவர்கள் பந்து வீசினார். இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் அகிலா தனஞ்ஜெயா 62 ஓவர்கள் பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவர்கள் இருவருடைய சுழற்பந்து வீச்சும் விதிமுறைக்கு மாறாக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளித்தனர். இந்த தகவலை ஐ.சி.சி. நேற்று தெரிவித்துள்ளது. நடுவர்களின் புகார் அறிக்கை இரு அணிகளின் நிர்வாகத்திடமும் அளிக்கப்பட்டு இருக்கிறது. நடுவர்கள் புகார் அளித்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் கேன் வில்லியம்சன், அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் தங்களை பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனையின் முடிவை பொறுத்தே அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

Next Story