கிரிக்கெட்

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமிக்க வேண்டும்ஷேவாக் வற்புறுத்தல் + "||" + As the selection committee leader of the Indian team To appoint Kumblav

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமிக்க வேண்டும்ஷேவாக் வற்புறுத்தல்

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமிக்க வேண்டும்ஷேவாக் வற்புறுத்தல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் கேப்டன் கும்பிளேவை நியமிக்க வேண்டும்.
புது டெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் கேப்டன் கும்பிளேவை நியமிக்க வேண்டும். அந்த பதவிக்கு அவர் சரியான நபர். 2007-08-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டி தொடருக்கு நான் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட போது என்னை சந்தித்து பேசிய அப்போதைய கேப்டன் கும்பிளே அடுத்த 2 தொடர்களில் அணியில் இருந்து நீங்கள் நீக்கப்படமாட்டீர்கள் என்று என்னிடம் தெரிவித்தார். அதுபோன்ற நம்பிக்கை வீரர்களுக்கு தேவையான ஒன்றாகும். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவிக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த பதவிக்கு வர பலர் ஆர்வம் காட்டுவார்கள். நான் பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருகிறேன். டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். தேர்வாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. நான் அதிக கட்டுப்பாடுகளை விரும்புவது கிடையாது. ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை 7 ஆண்டுகளாக குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.