கிரிக்கெட்

ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு + "||" + England vs Australia 3rd Test Day 1 LIVE Score, Ashes 2019: Toss Delayed Due To Rain

ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு

ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட்:  இங்கிலாந்து முதலில் பந்து வீச்சு
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
லீட்ஸ், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மழை பாதிப்புக்கு இடையே லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. எனவே ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.  மழையால்  ஆட்டம் தாமதமாக துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.