இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்


இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்
x
தினத்தந்தி 22 Aug 2019 1:29 PM GMT (Updated: 22 Aug 2019 1:29 PM GMT)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆன்டிகுவா, 

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்திய அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில், நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆட்டம் தொடங்கும் முன் டாஸ் போடப்படும். ஆனால் மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதமாக உள்ளதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.


Next Story