கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங் + "||" + First Test against West Indies, India batting first

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆன்டிகுவா, 

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி தொடங்கியது

இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ்  அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் கோலோச்சுவதில் முனைப்பு காட்டி வருகிறது.  2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்த முடியாமல் தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் அந்த ஏக்கத்தை தணிக்க எல்லா வகையிலும் தீவிரமாக முயற்சிக்கும்.