இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் பாதிப்பு


இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் மழையால் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 10:45 PM GMT)

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது.

கொழும்பு, 

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கிய சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தில்ருவான் பெரேரா சேர்க்கப்பட்டார்.

பலத்த மழை காரணமாக ஆட்டம் உணவு இடைவேளை வரை தொடங்கப்படவில்லை. அதன் பிறகு ‘டாஸ்’ ஜெயித்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த போது, மறுபடியும் மழை குறுக்கிட்டது. 36.3 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. திரிமன்னே (2 ரன்), குசல் மென்டிஸ் (32 ரன்) கேட்ச் ஆனார்கள். கேப்டன் கருணாரத்னே (49 ரன்), முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (0) களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story