கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட் + "||" + Test match against West Indies, India were all out for 297 in their first innings

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்துள்ளது.
ஆன்டிகுவா, 

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ்  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து  முதலில் களமிறங்கிய இந்திய  அணி, 2-வது நாள் உணவு இடைவெளியின் போது தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய  அணியில் அதிகபட்சமாக  ரஹானே 81 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 58 ரன்களும், ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, உணவு இடைவெளிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 369 ரன்னுக்கு ஆல்-அவுட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
2. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.