கிரிக்கெட்

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை! + "||" + Boom boom #Bumrah! Ace speedster edges past Ashwin, becomes fastest Indian pacer to 50 Test wickets

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆன்டிகுவா மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஜடேஜா, ரஹானே ஆகியோர் கை கொடுக்க இந்திய அணி 296 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தேநீர் இடைவேளை முடிந்த பின், பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் பும்ரா படைத்தார்.

இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் பும்ரா.

11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் பும்ரா இருக்கிறார். அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத் / ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான் / ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்), காவ்ரி / கபில் தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

அதேபோல ஒட்டு மொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்டுகளை சாய்த்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காவ்ரி (2606 பந்துகள்), உமேஷ் யாதவ் (2694 பந்துகள்), ஷமி (2753 பந்துகள்) அடுத்த இடங்களில் உள்ளனர்.

பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். 11 டெஸ்ட் போட்டிகளிலேயே விக்கெட்டுகளில் அரைசதம் அடித்து தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் பும்ரா.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவின் ஆசை
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
2. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.
3. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
4. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்
ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
5. ‘பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ - இர்பான் பதான் சொல்கிறார்
பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறினார்.