கிரிக்கெட்

உங்கள் ஈகோவை நீக்குங்கள்: விராட் கோலி படிக்கும் புத்தகம் + "||" + Get rid of the Detox Your Ego Virat Kohli studying Book

உங்கள் ஈகோவை நீக்குங்கள்: விராட் கோலி படிக்கும் புத்தகம்

உங்கள் ஈகோவை நீக்குங்கள்: விராட் கோலி படிக்கும் புத்தகம்
இந்திய கேப்டன் விராட் கோலி உங்கள் ஈகோவை நீக்குங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஆண்டிகுவா,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து  ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆனது ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 297 ரன்கள் எடுத்தது. இதில்  விராட் கோலி 9  ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இந்திய கேப்டன் விராட் கோலி  அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளார்.

 அதற்கு காரணம் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்து அவர் படித்த புத்தகம் தான்.  உங்கள் ஈகோவை நீக்குங்கள் என்று பொருட்படும் என்ற புத்தகத்தை தான் அவர் படித்து கொண்டிருந்தார். இது தொடர்பாக வெளியான புகைப்படம் உடனே சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. 

இந்நிலையில் விராட் கோலி இப்படி ஒரு புத்தக்கத்தை படிப்பது பேசு பொருளாகி உள்ளது. மேலும் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், தற்போது தான் விராட் கோலி சரியான புத்தகத்தை படிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்
விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
2. கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு
கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
3. ‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்
தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் கூறினார்.