கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட் + "||" + Test against India, West Indies all-out in their first innings at 222 Runs

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்துள்ளது.
ஆன்டிகுவா, 

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து  முதலில் களமிறங்கிய இந்திய  அணி,  தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

இந்திய  அணியில் அதிகபட்சமாக  ரஹானே 81 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 58 ரன்களும், ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணியில் கெமார் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 48 ரன்களும்,  ஜாசன் ஹோல்டர் 39 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து, 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹூஸ்டனில் தமிழில் பேசிய பிரதமர் மோடி
இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடைபெற்றது.
2. இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பிவைக்கும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
3. இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் !
இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்டுவிட்டதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டு பிளசிஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
4. 2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது தென் ஆப்பிரிக்கா
இந்திய அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்க அணி நிர்ணையித்துள்ளது.
5. இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான்
இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.