கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அபாரம் + "||" + First Test against West Indies: India won - Bumra 5 wickets

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அபாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அபாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பும்ரா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆன்டிகுவா,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 297 ரன்களும், வெஸ்ட்இண்டீஸ் அணி 222 ரன்களும் எடுத்தன.


75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4-வது நாளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியினர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ‘ஸ்விங்’ செய்து எதிரணியினரை திணறடித்தார்கள். 26.5 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 100 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கெமார் ரோச் 38 ரன்னும், மிகுல் கம்மின்ஸ் ஆட்டம் இழக்காமல் 19 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் 4 மெய்டன் ஓவர்களும் அடங்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 2-வது இன்னிங்சில் சதம் அடித்த இந்திய அணியின் துணைகேப்டன் ரஹானே (102 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் 60 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் உள்ளது. அத்துடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரை சமன் செய்தது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
2. முன்னாள் மந்திரிக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் - கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரம்
சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் முன்னாள் மந்திரிக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார். இதனால் கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய வீரர்கள் தர்மசாலா சென்றனர்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் தர்மசாலா சென்றனர்.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல்-அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா? - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.