இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவிப்பு


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2019 11:47 PM GMT (Updated: 25 Aug 2019 11:47 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் (111 ரன்), விக்கெட் கீப்பர் வாட்லிங் (25 ரன்) களத்தில் இருந்தனர்.

4-வது நாளான நேற்றைய தினம் மழை காரணமாக பிற்பகலுக்கு பிறகு தான் ஆட்டம் தொடங்கியது. இலங்கை பந்து வீச்சுக்கு எதிராக கோலோச்சிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். லாதம் 154 ரன்களில் (251 பந்து, 15 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த காலின் கிரான்ட்ஹோம் ரன் மழை பொழிந்தார்.

ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 110 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 382 ரன்கள் குவித்து, 138 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வாட்லிங் 81 ரன்களுடனும் (208 பந்து, 4 பவுண்டரி), கிரான்ட்ஹோம் 83 ரன்களுடனும் (75 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். இன்னும் ஒரு நாள் ஆட்டமே உள்ளதால் இந்த டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.


Next Story