கிரிக்கெட்

இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் - சையத் கிர்மானி வலியுறுத்தல் + "||" + Wriddhiman Saha should play 2nd Test instead of Rishabh Pant, says Syed Kirmani

இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் - சையத் கிர்மானி வலியுறுத்தல்

இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் - சையத் கிர்மானி வலியுறுத்தல்
2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி வலியுறுத்தி உள்ளார்.

* பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) 2020-ம் ஆண்டு இந்தியாவில் 4 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இந்த போட்டி நடப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தின் வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்த போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முழு திருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து முதல் இடமாக புவனேசுவரத்தை தேர்வு செய்து தற்காலிகமாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் கடைசியில் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்த பிறகு, போட்டி அமைப்பாளர்கள் இடத்தை இறுதி செய்வார்கள்.


* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்கு பதிலாக மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவை சேர்க்க வேண்டும் என்ற இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி வலியுறுத்தியுள்ளார். ‘ஓய்வு விஷயத்தில் டோனியை தனியாக விட்டு விடுங்கள். உரிய நேரம் வரும் போது அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார். அவரது ஓய்வு குறித்து பேசுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். டோனி இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்’ என்றும் கிர்மானி கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் விண்ணப்பித்துள்ளார். மிஸ்பா பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையின் எப்.சி. அணி மால்டா தீவை சேர்ந்த முன்கள வீரர் ஆந்த்ரே ஸ்கீம்ரியை ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து 33 வயதான ஆந்த்ரே ஸ்கீம்ரி கூறுகையில் ‘ஐ.எஸ்.எல். மற்றும் சென்னையின் எப்.சி.அணியில் பங்கேற்கும் முதலாவது மால்டா வீரர் என்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். சென்னை அணி பட்டம் வெல்லும் இலக்கை எட்ட எனது முழு பங்களிப்பையும் அளிப்பேன்’ என்றார்.

* எஸ்.ஆர்.எம். நிறுவனர் கோப்பைக்கான மாநில பால்பேட்மிண்டன் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி (சென்னை) அணி 35-31, 29-35, 35-30 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

* தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட தயாராக இருப்பதாக இந்திய மூத்த வீராங்கனை 36 வயதான மிதாலிராஜ் கூறியுள்ளார். ஆனால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருத்தில் கொண்டு இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ள தேர்வு குழு, மிதாலியை நீக்கலாம் என்று தெரிகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வருகிற 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
2. இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? - முன்னாள் தேர்வு குழு தலைவர் விளக்கம்
இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
3. இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்
இந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
4. நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்
நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.
5. ‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட்
இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ஸ்கோரில் (165 ரன் மற்றும் 191 ரன்) சுருண்டது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.