கிரிக்கெட்

காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி + "||" + Gambhir lashes out at Afridi over Kashmir tweet, Afridi hits back

காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி

காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்
புதுடெல்லி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் மக்களுடன் ஒற்றுமையைக் காட்ட ஒவ்வொரு வாரமும் தனது நாட்டில் 30 நிமிட நிகழ்வு நடைபெறும்  என்று அறிவித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி இந்த அழைப்பை ஆதரித்து அவர் கராச்சியில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு. மசார்-இ-காயிதில் இருப்பார் என்று கூறினார் ( பாகிஸ்தான் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவின் கல்லறை)

"எங்கள் காஷ்மீர் சகோதரர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த"செப்டம்பர் 6 ஆம் தேதி நான் ஒரு ஷாஹீத்தின் வீட்டிற்கு வருவேன்.  விரைவில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறி உள்ளார்.

பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஷாகித் அப்ரிடி காஷ்மீர் குறித்து  வெளியிட்டு உள்ள டுவிட்டுக்கு பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர், நண்பர்களே  ஷாஹித் அஃப்ரிடி முதிர்ச்சியடைய மறுத்துவிட்டார் என்பது எல்லா சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது !!! உதவிக்கு ஆன்லைன் மழலையர்  பயிற்சி பள்ளிகளை  ஆர்டர் செய்கிறேன். என டுவிட்டரில் கூறி உள்ளார்.

இதற்கு பதில் அளித்து டுவிட் செய்த அப்ரிடி  கவுதம் கம்பீர் நான் பணிபுரிந்த பலவீனமான மற்றும் மனரீதியான மிகவும் பாதுகாப்பற்ற நபர்களில் ஒருவர்  என கூறி உள்ளார்.
இது குறித்து கவுதம் காம்பீர் நிருபர்களிடம்  கூறும் போது  சிலர் ஒருபோதும் வளர மாட்டார்கள், அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு வயது இல்லை, அவர்களின் மூளையும் வளரவில்லை என கூறி உள்ளார்.


பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டத்தும் தன்னுடன் சேரத் தயாராக இருக்கும் மற்ற விளையாட்டு வீரர்களுடன் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வருவார் என்று கூறியிருந்தார். கட்டுப்பாடு கோடு அருகே அமைதிக்காக ஒரு கொடியை ஏற்றி வைப்பேன் என்று மியாண்டத் கூறி உள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கான், எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு சென்று அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சந்தித்தார். பாகிஸ்தான் ராணுவம் குத்துச்சண்டை வீரருக்கான சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது
இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை 3-வது நாளிலேயே சுருட்டிய இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வங்கதேச அணி வீரர்கள் 2 பேர், மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. 31-வது பிறந்த நாள் : தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்ட விராட்கோலி
31-வது பிறந்த நாள் கொண்டாடி வரும் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்.
4. 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம்
மெக்காஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள் 2019 பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடத்தில் உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டார்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.