கிரிக்கெட்

இந்தியா ஏ - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் மாற்றமா? + "||" + India A - Under 19 From the position of coach Dravid changed?

இந்தியா ஏ - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் மாற்றமா?

இந்தியா ஏ - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் மாற்றமா?
இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து டிராவிட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட், ஓய்வுப்பெற்ற பிறகு  பயிற்சியாளராக வீரர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களது ஆட்டத்திறனை மேம்படுத்தி தரமான இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு கொடுக்கும் பொறுப்பினை திறம்பட செய்து வருகிறார்.   

இந்நிலையில்  ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக  நியமிக்கப்பட்டார். இதையடுத்து  தற்போது  டிராவிட் இனி இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

ஐ.சி.சி. தகவலின்படி, இந்தியா ஏ அணிக்கு கோடக் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு பாரஸ் மாம்பரே ஆகியோர்  பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும், மேலும் அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இவர்கள் அந்த பொறுப்பில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.