கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணி அறிவிப்பு - டோனிக்கு இடமில்லை + "||" + T20 match against South Africa; Indian team announces

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணி அறிவிப்பு - டோனிக்கு இடமில்லை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணி அறிவிப்பு - டோனிக்கு இடமில்லை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவுக்கு வருகை தந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது.


இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே 38 வயதான விக்கெட் கீப்பர் டோனி அணியில் இடம் பெறவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஒதுங்கி இருக்கும் டோனி, தனது எதிர்கால திட்டம் குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் ஆடிய வீரர்கள் அப்படியே நீடிக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இந்திய 20 ஓவர் அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தொடர்புடைய செய்திகள்

1. சிலியில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது - 38 பேரின் கதி என்ன?
சிலியில் 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
2. ‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து
‘வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
3. திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதி - கலெக்டர் அறிவிப்பு
மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4. 6 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
6 மாத இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்தார்.
5. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.