கிரிக்கெட்

கேப்டனாக சில சாதனைகளை நோக்கி விராட் கோலி + "||" + Virat Kohli towards some achievements as captain

கேப்டனாக சில சாதனைகளை நோக்கி விராட் கோலி

கேப்டனாக சில சாதனைகளை நோக்கி விராட் கோலி
இந்திய வீரர் விராட் கோலி பேட்டிங் மட்டுமல்லாது கேப்டனாகவும் சில சாதனைகளை படைக்க உள்ளார்.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து,  தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில்  நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

விராட் கோலி பேட்ஸ்மேனாக பல்வேறு சாதனைகள் செய்திருந்தாலும்,  கேப்டனாகவும் சில சாதனைகளை படைத்து வருகிறார். இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி முறியடிக்க வாய்ப்புகள் உள்ள சில சாதனைகள்... 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்தால், அது விராட் கோலி கேப்டனாக  அடிக்கும் 19-வது சதமாகும்.  கேப்டனாக அதிக சதமடித்தவர்கள் பட்டியலில், 19 சதங்களுடன் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 2-ம் இடத்தில் உள்ளார். எனவே இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பதன் மூலம் பாண்டிங் சாதனையை விராட் கோலி சமன் செய்வார். தென்னாப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் 25 சதங்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இது மட்டுமல்லாது இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை முறியடிக்க முடியும். அதாவது, டோனி தலைமையிலான இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில்  27 வெற்றிகளை பெற்றுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது வரை 47 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் டோனியின் சாதனையை முறியடித்து  அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற பட்டியலில் கோலி முதலிடம் பெறுவார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது - விராட் கோலி
கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது என விராட் கோலி கூறியுள்ளார்.
2. போலியான தகவல்களை பரப்புவது கொரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம் - விராட் கோலி வீடியோ
கொரோனா பரவுவதால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் போலி தகவல்களை பரப்ப வேண்டாம் என டிக்டாக் சார்பாக விராட் கோலி வீடியோ வெளியிட்டுள்ளார்.
3. ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி
ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. கொரோனா: அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் - விராட் கோலி
அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் என விராட் கோலி கூறியுள்ளார்.
5. டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி? நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்
கிரிக்கெட் போட்டியில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி இருக்கும்? என நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் சுவாரஷ்ய தகவலை தெரிவித்துள்ளார்.