கிரிக்கெட்

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியின் பெயர் மாறுகிறது + "||" + ISL Football: The name of the Delhi team changes

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியின் பெயர் மாறுகிறது

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியின் பெயர் மாறுகிறது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிக்கான டெல்லி அணியின் பெயர் மாற உள்ளது.
புவனேசுவரம்,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் விளையாடும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியின் பெயர் மாற்றப்படுகிறது. புவனேசுவரத்தை அடிப்படையாக கொண்டு ஒடிசா எப்.சி. என்ற பெயரில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதையொட்டி டெல்லி அணி நிர்வாகம், ஒடிசா மாநில விளையாட்டுத்துறையுடன் ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும் 6-வது ஐ.எஸ்.எல். போட்டியில் ஒடிசா அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே, முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிக்கு 22 வயதான இந்திய இளம் வீரர் லாலின்ஜூவாலா சாங்தே ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடிய அவர் இந்த சீசனில் சென்னை அணிக்காக கால்பதிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது மும்பை
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்.சி.கோவாவை எதிர்கொண்டது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவானது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.