கிரிக்கெட்

அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் டெஸ்டில் அறிமுகம் + "||" + Introduction to the world's heaviest cricketer in Test

அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் டெஸ்டில் அறிமுகம்

அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் டெஸ்டில் அறிமுகம்
அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் டெஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

கிங்ஸ்டனில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் 26 வயதான ரகீம் கார்ன்வால் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீசின் 319-வது டெஸ்ட் வீரர் ஆவார்.


இவரது சிறப்பு அம்சமே குண்டான உடல் தான். 140 கிலோ எடை கொண்ட கார்ன்வால், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக எடை கொண்ட வீரராக அறியப்படுகிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் வார்விக் ஆம்ஸ்ட்ராங் 133 முதல் 139 கிலோ வரை எடை இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

மாமிச மலை போன்ற தோற்றமளிக்கும் 6 அடி 6 அங்குலம் உயரமுடைய கார்ன்வால் பேட்டிங் மட்டுமின்றி, சுழற்பந்து வீசுவதிலும் வல்லவர். டெஸ்டில் தனது விக்கெட் கணக்கையும் உடனே தொடங்கி விட்டார். அவரது சுழலில் புஜாரா (6 ரன்) ஆட்டம் இழந்தார்.