கிரானைட் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து | கொரோனா ஊரடங்கு மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் பலன் - ஸ்டாலின் | அரசை நம்பாமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் | ஆகஸ்ட் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து | சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்-மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் | தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைவ- ஒரு கிராமுக்கு ரூ.229 குறைந்து, ரூ.5013க்கு விற்பனை |

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்ப்பு + "||" + 2nd Test against West Indies: India lost by 5 wickets and scored 264 runs

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்த்துள்ளது.
கிங்ஸ்டன்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் அஸ்வின் மீண்டும் வெளியே உட்கார வைக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு மாற்றமாக மிக்யூல் கம்மின்ஸ் மற்றும் காயமடைந்த ஷாய் ஹோப் ஆகியோருக்கு பதிலாக அறிமுக வீரர்களாக விக்கெட் கீப்பர் ஜமார் ஹாமில்டன், ரகீம் கார்ன்வால் ஆகியோர் இடம் பிடித்தனர்.


‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் களம் புகுந்தனர். முதல் ஓவரிலேயே பந்து இரண்டு முறை எல்லைக்கோட்டுக்கு ஓடியது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து பிரிந்தது. லோகேஷ் ராகுல் (13 ரன்), ஹோல்டரின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கார்ன்வாலிடம் சிக்கினார். அடுத்து வந்த புஜாரா (6 ரன், 25 பந்து) சொதப்பினார். புதுமுக சுழற்பந்து வீச்சாளர் கார்ன்வாலின் பந்து வீச்சில் ‘பாயிண்ட்’ திசையில் புரூக்சிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் மயங்க் அகர்வாலுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். நிதானமாக ஆடிய இவர்கள் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். மயங்க் அகர்வால் தனது 3-வது அரைசதத்தை கடந்த நிலையில், 55 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஹானே24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில் 76 ரன்களில் கேட்ச் ஆனார். 

அடுத்ததாக ஹனுமான் விஹாரி மற்றும் ரிஷாப் பாண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் விகிதம் கணிசமாக உயர்ந்தது. பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் ஹனுமான் விஹாரி 42 ரன்களும், ரிஷாப் பாண்ட்  27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், கேமர் ரோச் மற்றும் ரகீம் கார்ன்வால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப் அரைசதம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப் அரைசதம் அடித்தனர்.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
3. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
4. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கு சிக்கல்
மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை - மைக்கேல் ஹோல்டிங்
கடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.