கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சென்னையில் நாளை தொடக்கம் + "||" + For school teams Over 20 cricket match Starting tomorrow in Chennai

பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்
6-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை குருநானக் கல்லூரி மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கான 6-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை குருநானக் கல்லூரி மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. ‘நாக்-அவுட்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் செயின்ட் பீட்ஸ், சாந்தோம், நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் உள்பட 16 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நெல்லையில் பின்னர் நடைபெறும் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெறும். இது தவிர கோவை, திருச்சி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளும் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் முரளி விஜய், இந்தியா சிமெண்ட்ஸ் மார்க்கெட்டிங் தலைவர் பி.ரமேஷ், முத்தூட் நிறுவன அதிகாரி ஆர்.சரீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.