கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 117 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் + "||" + Test against India All out on 117 runs in first innings West Indies

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 117 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 117 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 117 ரன்களில் சுருண்டது.
கிங்ஸ்டன், 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விஹாரி சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். விஹாரி 111 (225) குவித்த நிலையில் ஹோல்டர் பந்தில் கேட்ச் ஆனார். மேலும் இந்திய அணியில் அதிகபட்சமாக  விராட் கோலி 76 ரன்களும், இஷாந்த் சர்மா 57 ரன்களும், மயங்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், ரகீம் கார்ன்வால் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா ஹாட்ரிக் விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் முகமது ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 299 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
2. வெஸ்ட் இண்டீஸ் உடனான இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் விலகி உள்ளார்.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது
தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
5. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 171 ரன்கள் இலக்கு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 171 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.