கிரிக்கெட்

ஆசிய கண்டத்துக்கு வெளியே டெஸ்டில் அதிக விக்கெட்: கபில்தேவின் சாதனையை முறியடித்தார், இஷாந்த் ஷர்மா + "||" + Ishant Sharma breaks Kapil Dev's record

ஆசிய கண்டத்துக்கு வெளியே டெஸ்டில் அதிக விக்கெட்: கபில்தேவின் சாதனையை முறியடித்தார், இஷாந்த் ஷர்மா

ஆசிய கண்டத்துக்கு வெளியே டெஸ்டில் அதிக விக்கெட்: கபில்தேவின் சாதனையை முறியடித்தார், இஷாந்த் ஷர்மா
ஆசிய கண்டத்துக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டியில், இஷாந்த் ஷர்மா அதிக விக்கெட்களை குவித்து கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
கிங்ஸ்டன்,

ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்து வரும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் ஜமார் ஹாமில்டன் (5 ரன்), இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஆசிய கண்டத்துக்கு வெளியே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் ஷர்மா படைத்தார். வெஸ்ட்இண்டீஸ் அணியின் 2-வது இன்னிங்சில் பிராத்வெய்ட் (3 ரன்) விக்கெட்டையும் இஷாந்த் ஷர்மா வீழ்த்தினார். ஆசிய கண்டத்துக்கு வெளியே 45-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 31 வயதான இஷாந்த் ஷர்மா 157 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்பு இந்த வகையில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் 45 டெஸ்டில் விளையாடி 155 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதனை இஷாந்த் ஷர்மா முறியடித்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் 38 டெஸ்ட் போட்டியில் 147 விக்கெட்டுகள் எடுத்து இந்த வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார். ஆசிய கண்டத்துக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 50 டெஸ்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார்.

மேலும், வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 3-வது நாளில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் பிராத்வெய்ட், இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 11-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ரிஷாப் பண்ட் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் வகையில் அவர் செய்த 50-வது ‘அவுட்’ இதுவாகும். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 பேரை ஆட்டம் இழக்க வைத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷாப் பண்ட் பெற்றார். இதற்கு முன்பு விக்கெட் கீப்பர் டோனி 15 டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: மேத்யூஸ் இரட்டை சதம்
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இரட்டை சதம் விளாசினர்.
2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 251 ரன்னில் ஆல்-அவுட்
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 264 ரன்கள் முன்னிலை
கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 264 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5. இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியின், 3-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.