கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி + "||" + Steve Smith reclaims No.1 Test ranking from Virat Kohli

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி
டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தை பறிகொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தை இழந்து, 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதலாவது இன்னிங்சில் கோலி அரைசதம் அடித்த போதிலும் (76 ரன்) 2-வது இன்னிங்சில் முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆகிப் போனார். ஒவ்வொரு மோசமான ஆட்டமும் வீரர்களின் தரவரிசையில் எதிரொலிக்கும். அந்த வகையில் 7 புள்ளிகளை இழந்த கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (904 புள்ளி) மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 24 மற்றும் 64 ரன் வீதம் எடுத்த இந்திய துணை கேப்டன் ரஹானே 4 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு பிறகு ரஹானே டாப்-10 இடத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இதே டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் ஹனுமா விஹாரி 40 இடங்கள் ஏற்றம் கண்டு 30-வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2020- அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார்? யார்?
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
2. அப்பாவாகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி
விராட் கோலி -பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர் வியாழக்கிழமை சமூக ஊடகம் மூலம் கர்ப்ப செய்தியை அறிவித்து உள்ளனர்.
3. டெஸ்ட் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
டெஸ்ட் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் 3-வது இடத்துக்கு முன்னேறினார்.
4. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்
விமான பயணத்தின் போது டோனி, விராட் கோலி ஆகியோர் எளிமையை கடைப்பிடிப்பவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
5. கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு
கங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...