கிரிக்கெட்

பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர் + "||" + Sanjay Bangar involved in heated spat with selectors over coaching snub - Report

பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்

பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,

இரு வாரங்களுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு நடைபெற்று தலைமை பயிற்சியாளர், பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கருக்கு பதிலாக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் சஞ்சய் பங்கரின் பதவிகாலம் முடிவடைந்தது.

இந்நிலையில், அணி பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று கொண்டிருந்தபோது, தேர்வாளர்களுள் ஒருவரான தேவங் காந்தியின் அறையை முரட்டுதனமாக திறந்து உள்ளே சென்ற சஞ்சய் பங்கர், தனக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவி வழங்கப்படாதது குறித்து தேர்வு குழுவினரிடம் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது, இந்த பதவியில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கும் முடிவு சரியானது அல்ல என்று சஞ்சய் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தன்னை பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யவில்லை என்றாலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு பொறுப்பை தரவேண்டும் என்றும் அவர் கூறியதாகவும் தெரிகிறது.

முன்னதாக இந்திய அணியின் மூத்த வீரர் தோனியை முன்னதாக களமிறக்கும் முடிவுக்கு சஞ்சய் பங்கர் எதிராக இருந்ததாகவும், இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து அவர் மீதான நம்பிக்கை அணியினரிடையே குறைந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது
இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை 3-வது நாளிலேயே சுருட்டிய இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வாந்தி எடுத்த வங்கதேச அணி வீரர்கள்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது வங்கதேச அணி வீரர்கள் 2 பேர், மோசமான சூழல் காரணமாக வாந்தி எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. 31-வது பிறந்த நாள் : தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்ட விராட்கோலி
31-வது பிறந்த நாள் கொண்டாடி வரும் விராட் கோலி தனக்குத் தானே கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்.
4. 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம்
மெக்காஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்கள் 2019 பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடத்தில் உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டார்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.