கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார், அஸ்வின் + "||" + Kings XI Punjab Skipper Ravichandran Ashwin Set to Play for Delhi Capitals

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார், அஸ்வின்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார், அஸ்வின்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மாற உள்ளார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.7.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின். கடந்த இரு சீசனில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். தொடக்ககட்ட ஆட்டங்களில் வென்றாலும் கடைசி கட்டத்தில் சொதப்பியதால் இரண்டு முறையும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி 28 ஆட்டங்களில் விளையாடி 12-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. சமீபத்தில் பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளரை அதிரடியாக நீக்கிய பஞ்சாப் அணி நிர்வாகம், புதிய கேப்டனுடன் 2020-ம் ஆண்டு தொடரை எதிர்கொள்ள விரும்புவதாகவும் கூறியது.


இந்த நிலையில் அஸ்வின், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார். இது தொடர்பாக இரு அணி நிர்வாகத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. அஸ்வின், டெல்லி அணியுடன் இணைவதால் பஞ்சாப் அணியை லோகேஷ் ராகுல் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.