கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி திணறல், ரஷித்கான் அபார பந்துவீச்சு + "||" + Tests against Afghanistan: Bangladesh stumbling

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி திணறல், ரஷித்கான் அபார பந்துவீச்சு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி திணறல், ரஷித்கான் அபார பந்துவீச்சு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
சட்டோகிராம்,

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. ரமத் ஷா சதம் (102 ரன்) அடித்தார். அஸ்ஹார் ஆப்கன் 88 ரன்களுடன் களத்தில் இருந்தார்.


இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அஸ்ஹார் ஆப்கன் 92 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு வந்த இளம் கேப்டன் ரஷித்கான் அதிரடியில் மிரட்டினார். அவர் 61 பந்துகளில் 51 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்தார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய உள்ளூர் அணியான வங்காளதேசத்துக்கு முதல் ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் அதிர்ச்சி அளித்தனர். ஷட்மன் இஸ்லாம் ‘டக்-அவுட்’ ஆனார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கொடுத்த நெருக்கடியில் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் தனது ஒரே ஓவரில் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (11 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (0) ஆகியோரை காலி செய்து, எதிரணிக்கு பீதியை காட்டினார். விக்கெட் சரிவுக்கு மத்தியில் மொமினுல் ஹக் (52 ரன்), மொசாடெக் ஹூசைன் (44 ரன், நாட்-அவுட்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி னர். ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 67 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களுடன் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. ஆல்- ரவுண்டராக முத்திரை பதித்த ரஷித்கான் 4 விக்கெட்டுகளும், முகமது நபி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இன்னும் 148 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் வங்காளதேச அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.