ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார்: தினேஷ் கார்த்திக்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்


ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார்: தினேஷ் கார்த்திக்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 7 Sep 2019 3:05 AM GMT (Updated: 7 Sep 2019 3:05 AM GMT)

ஒப்பந்த விதிமுறையை மீறியதாக தினேஷ் கார்த்திக்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

புதுடெல்லி, 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த 34 வயதான தினேஷ் கார்த்திக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது அவர் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்துள்ளார். இது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான அணியாகும். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதால் ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் கிளம்பியுள்ளது.

இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உண்மை தான். தினேஷ் கார்த்திக் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story