கிரிக்கெட்

கிரிக்கெட்டை விட கணக்கு பாடத்தை படிக்க கடினமாக உழைத்தேன் - விராட் கோலி + "||" + I worked hard to study Maths Virat Kohli

கிரிக்கெட்டை விட கணக்கு பாடத்தை படிக்க கடினமாக உழைத்தேன் - விராட் கோலி

கிரிக்கெட்டை விட கணக்கு பாடத்தை படிக்க கடினமாக உழைத்தேன் - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை விட கணக்கு பாடத்தை படிக்க கடினமாக உழைத்தேன் என தெரிவித்துள்ளார்.
உலகிலேயே தலைச்சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி நடத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விராட்கோலி, தனது பள்ளி அனுபவம் குறித்தும், கிரிக்கெட் குறித்தும் பேசியுள்ளார். 

அதில், 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு பின் என்னுடைய உடற்த்தகுதியில் அதிகமாக கவனம் செலுத்தினேன். அத்துடன் அன்று முதல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் என தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாது தனது பள்ளி பருவம் குறித்து பேசிய விராட் கோலி,  

பள்ளி நாட்களில், நமக்கு கணக்கு பாடம் இருக்கும். தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். என்னுடைய பள்ளி பருவத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டது கணக்கு பாடத்தை படிக்க தான். குறிப்பாக நான் பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தேர்ச்சி பெற மிகவும் கடினமாக உழைத்தேன். காரணம் அது மாநில அளவில் நடக்கும் தேர்வு என்பதால். பொதுவாக கணக்கு பாடத்தில் நான் 100 மதிப்பெண்களுக்கு  3 மதிப்பெண் எடுப்பேன். எனக்கு கணக்கு பாடம் எளிதாக புரியாது. ஆகவே தான் எப்படியாவது பத்தாவது வகுப்பை முடிக்க வேண்டும் என்று கருதி கடினமாக உழைத்தேன், அந்த அளவிற்கான உழைப்பை இதுவரை நான் கிரிக்கெட் வாழ்க்கையில் கூட செய்தது இல்லை என தெரிவித்துள்ளார்.